×

பிரபல துணை நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது..!!

 

சின்னத்திரை மற்றும் திரைப்பட துணை நடிகை தீபாவின் தந்தை  70 வயதான புலவர் கணேசன் ஆவார். இவர் முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கினர். 

 

இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் அவரையும் வெட்டியதில், அவரது கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

 

காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய தூத்துக்குடி சக்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் பொன்ராஜ்(25) மற்றும் இசக்கி(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.