×

ஜெயம் ரவிக்கு உருகி உருகி அட்வைஸ் செய்த நடிகை அம்பிகா! அவர் பதிவிட்ட "அந்த" உருக்கமான வார்த்தைகள்!

 

நடிகர் ரவி மோகன் அவரின் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவகாரத்து கோரி கடந்த 2024 செப்டம்பரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால், இருதரப்பினரும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பாக, ரவி மோகனின் தோழியான கெனிஷா, ஆர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறாக பேசக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற சூழலில், ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி விவகாரத்திற்கு கெனிஷா தான் காரணம் என பலரும் வீடியோ பதிவிட்டு வந்தனர்.


கெனிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், 'ரவி ஒன்றும் குழந்தை கிடையாது. அதேபோல நானும் பாலியல் தொழிலாளி கிடையாது' என ஆவேசமாக பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, கெனிஷா மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், 'நான் சென்னையை விட்டும், இறுக்கமான பிடியை விட்டும் செல்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த பலரும் ரவி மோகன், கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டனரா? என சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ரவி மோகன் இந்த விவகாரம் தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்தார்.

தனது, விவாகரத்து விவகாரம் குறித்தும் அதற்கு முன்னரும் பின்னரும் அவர் வாழ்க்கையில் எதிர் கொண்ட சம்பவங்கள் நெருக்கடிகள் மன ஓட்டங்கள் போன்றவற்றை மொத்தமாக கொட்டி விட்டார் என்று சொல்லலாம். அதுவும் கண்ணீருடன் அவர் தெரிவித்த சில விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

இந்நிலையில் 80களில் பிரபலமான நடிகையாக இருந்த அம்பிகா அவரது எக்ஸ்தள பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில்,

அன்பு ரவி, தயவுசெய்து பலவீனமாகிவிடாதே. எல்லாமே கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும். கடவுள் சற்று தாமதம் செய்கிறார், ஒருவேளை உன்னை சோதிக்கிறார் அவ்வளவுதான்.

எதிர்மறையான எதையும் செய்யாதே. உனக்கு நீயே தீங்கு இழைத்துக்கொள்ளாதே. (குழந்தைகள் மீதான) உனது அன்பு, (உன் குழந்தைகளாகிய) உன் காதலை மீண்டும் உன் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும். பிரார்த்தனை செய். முக்கியமாக, நன்றாக உறங்கு. உன்னை நன்கு அறிந்த உன் பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரத்தைச் செலவிடு.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.