×

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்..!

 

நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் என் தங்கை கல்யாணி படத்தில் நடிகர் கனிஷ்கரின் தங்கையாக நடித்திருந்தார். பிறகு பல வருடங்கள் கழித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை ஆர்த்தி கணேஷ் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது காமெடி நடிகையாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதுபோல மானாட மயிலாட நடன நிகழ்ச்சிகளிலும் கணவரும் மனைவியும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இரண்டாவது பரிசையும் பெற்றிருந்தனர். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆர்த்தி கலந்து கொண்டிருந்தார். இவருடைய உடல் எடை குறித்து பலர் கலாய்தாலும் அதையே தனக்கு சாதகமாக வைத்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

பொல்லாதவன் படத்தில் இவர் செய்த அறந்தாங்கி கேரக்டர் பெரிய அளவில் இவருக்கு பாராட்டு வாங்கி கொடுத்தது. அதுபோல தனுசுடன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை ரவீந்தரன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.

ஆர்த்தியின் தந்தை ரவீந்தரன் தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தனிச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஆர்த்தியின் அம்மா 2006ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார்.ஆர்த்திக்கு ஒரேயொரு அக்கா. அவர் சீனாவில் வசித்துவருகிறார்.

ஓய்வுக் காலத்தை சொந்த ஊரான கோயம்புத்தூரில் கழித்துவந்த ரவீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலன் பாதிக்கப்பட்டார்.

அப்போது முதல் ஆர்த்தி தந்தையை அருகில் வைத்துக் கவனித்துவந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ரவீந்திரனுக்கு ஸ்ட்ரோக் வர, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.