'ஜனநாயகன்' படம்பார்த்து ஆட்டம் போட்ட நடிகர் விமல்..!
தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. விஜய்யின் கடைசி படம் என கருதப்படுவதால் அவரது ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை ஒரு திருவிழாவை போல கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது.திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் (KVN Productions) தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி இன்று இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. உலக அளவில் சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ஜனநாயகன் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, பட்டாசு வெடித்து விஜய்யின் கடைசி படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஜனநாயகன் முதல் காட்சி பார்த்த பின் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆன்லைனில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், ”ஜனநாயகன் ஒரு நல்ல மாஸ் மசாலா பொழுதுபோக்கு திரைப்படம். இரண்டாம் பாதி அரசியல் மற்றும் ஆக்ஷன் கலந்து கதையாக நகர்கிறது. விஜய்க்கும், மமிதா பைஜூவிற்கும் இடையிலான எமோஷனல் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் கலக்கியுள்ளார். பிளாஷ்பேக் அறிமுக காட்சி, ஒரு பேரே வரலாறு பாடல் ஆகியவை ரசிக்கும் படியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இது தளபது விஜய் படம், பழைய காலத்து கமர்ஷியல் படமாக இருந்தாலும், நல்ல பொழுதுபோக்கு படமாக உள்ளது” என கூறியுள்ளார்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் பல நடிகர் நடிகைகள் தியேட்டர்க்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஜனநாயகன் படம் பார்க்க வந்த திரிஷா, கீர்த்தி சுரேஷ், அனிருத், மமிதா பைஜு ஆகியோர் வந்திறுந்தனர்
இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கில் முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விமல், திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.