×

தனது பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு - விஜய் ஆண்டனி விளக்கம்

 

பயங்கரவாத கூட்டத்தின் நோக்கள், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கள், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான ஈரங்களால் நம் இறையாளமையை பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.