நடிகர் வடிவேலு தம்பி காலமானார்
நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் வடிவேலுவின் தாயார் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது சகோதரரும் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் வடிவேலுவின் தம்பி இழப்புக்கு திரை உலகை சேர்ந்த பலரும்இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.