×

பாக்யராஜ் மறைவு : நடிகர் தம்பிராமையா கண்ணீர் மல்க இரங்கல்..!

 

மறைந்த நடிகரும் இயக்குநருமான பாக்யராஜுக்கு நடிகர் தம்பி ராமையா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசிகராக இருந்தது பாக்யராஜுக்குத்தான். நான் பேனா எடுத்து ஒரு காட்சி எழுதுகிறேன் என்றால், அதில் அவரின் தாக்கம் இருக்கும்" என்று கூறினார். மேலும், கையெடுத்து கும்பிட்டு தனது இரங்கலை தெரிவித்தார்.

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பிராமையா, “வாழ்க்கையில் அனுபவித்ததை சிந்தனையில் கொண்டு வந்து, சிந்தனையில் கொண்டு வந்ததை எப்படி எழுதுவது என்று கொண்டு வந்தவர் பாக்யராஜ். அதுமட்டுமின்றி எழுதியதை மக்களுக்குப் புரியும் வகையில் படம் எடுத்த பிதாமகன். நான் பேனா எடுத்து ஒரு காட்சி எழுதுகிறேன் என்றால் அது இவரின் தாக்கம்தான். 'இது நம்ம ஆளு' மூலம் திரைப்படத்தில் பல முற்போக்கு கதைகளை சொல்லியிருக்கிறார். நான் எம்ஜிஆருக்கு முரட்டுத்தனமான பக்தர். அதன்பின் இவருக்குத்தான். இப்படிப்பட்ட மனிதரை இழந்திருப்பது கொடும் துயரம்” என கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டு இரங்கல் தெரிவித்தார்.

தனது இயக்குநரின் மறைவை தாங்காமல் அழுத தம்பி ராமையா

TamilCinema | Kollywood | RIPBhagyaraj#Newstamil24x7 #KBhagyaraj #ThambiRamaiah pic.twitter.com/Ep56akm00v

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 27, 2026