×

"விஜய் வந்தது மகிழ்ச்சி! இளைய தலைமுறை காசு வாங்காமல் வாக்களித்துள்ளது"- சிவக்குமார்

 

CM விஜய்க்கு, இளைய தலைமுறை காசு வாங்காமல் வாக்களித்துள்ளது. விஜய் வந்தது மகிழ்ச்சி. திமுக , அதிமுக வேண்டாம் என மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்து உள்ளார்கள் என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

கோவையில் தனியார் மருத்துவமனையி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், “மாற்றம் என்பது தவிர்க்க முடியாத விஷயம். 1954லிருந்து 9 வருடம் காமராஜர் நாட்டை ஆண்டார். அவர் சாகும்போது 140 ரூபாயும், நாலு ஜோடி சட்டை, கொஞ்சம் புத்தகங்கள் இதுதான் அவரின் சொத்து. அப்படிப்பட்ட காமராஜரையே மாற்றத்திற்காக தோற்கடித்தார்கள். திமுக ஜெயித்தவுடன், ‘தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது' என்று பக்தவச்சலம் சொன்னார். அவர்கள்தான் 69 வருடங்கள் ஆண்டனர். இப்போது அவர்கள் பிடிக்கவில்லை என்று விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள்தான் நீதிபதிகள்; அவர்களின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சதவீத முதல் தலைமுறை வாக்காளர்கள் காசு வாங்காமல் ஓட்டுப் போட்டுள்ளனர்.  என்னுடைய பேரன் விஜய்க்கு வாக்களித்துள்ளான். அடுத்த தலைமுறை எங்களுக்கான சரியான தலைவர் விஜய் என்று தேர்ந்தெடுக்கும்போது அதை தப்பு என்று சொல்ல நீங்கள் யார்?" விஜய் வந்தது மகிழ்ச்சி. திமுக , அதிமுக வேண்டாம் என மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்து உள்ளார்கள். மக்கள் விருப்பத்தை தவறு என்று சொல்லக்கூடாது” என்றார்