×

“எம்ஜிஆர் விட்ட சாபத்தில்தான் நான் இப்படி இருக்கிறேன்..”- நடிகர் சிவக்குமார்

 

என்னுடைய நூறாவது படத்தில் “சாகும் வரை சிவக்குமார் இளமையாக இருப்பான்” என்று எம்ஜிஆர் சாபம் விட்டு சென்றார் என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114 வது பிறந்தநாள் விழா மற்றும் நாடகமே உலகம் நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர் சிவகுமார் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜி சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேடையில் நடிகர் சிவக்குமார் பேசுகையில்,  தான் கமல்ஹாசன் போல தேர்ந்த நடனக்கிழங்கர் இல்லை என்றும் ஆனால் பதினைந்து நாட்கள் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டு தகதகவென ஆடவா என்ற பாடலுக்கு நடனம் ஆடியதாக தெரிவித்தார் மேலும் உலகத்தில் இரண்டு நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் கலைவாணர் மற்றொருவர் சார்லி சாப்ளின் என்றார் தன்னுடைய நூறாவது படத்தில் சாகும் வரை இளமையாக இருப்பான் சிவக்குமார் என்று எம்ஜிஆர் சாபம் விட்டுச் சென்றதாக கூறிய அவர் , எம்ஜிஆர் சொன்னது போல இன்றும் தான் இளமையாக இருப்பதாகவும் தனக்கு 85 வயது ஆகிறது ஆனால் தன்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது என்று சிரித்தபடி பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.