×

 நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்த துயர சம்பவம் - திரைத்துறையினர் ஆறுதல்!!

 

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66.

காங்கிரசை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார்.  திருப்பூர் அருகே காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை அரண்மனை சிறு பள்ளம் தோட்டத்தை சேர்ந்த இவர் , கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.  இவரின் சகோதரர் ராஜ்குமார் காங்கேயம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

இந்நிலையில் அர்ஜுன் மன்றாடியாரின் மனைவி கல்பனா மன்றாடியார் நடிகர்  சத்யராஜின்  உடன் பிறந்த சகோதரி ஆவார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கல்பனாவின் இறுதிச்சடங்குகள் பழையகோட்டை சிறு பள்ளம் தோட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. மறைந்த அர்ஜுன் மன்றாடியார் - கல்பனா தம்பதிக்கு மகேந்தர் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.