நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்
Jan 19, 2025, 12:15 IST
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ்ஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.