செளகார் ஜானகி உடலை கண்டு கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்..!
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) வயது மூப்பு காரணமாக நேற்று (ஆக.21) காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் இன்று (ஆக.22) வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சத்யராஜும் சௌகார் ஜானகியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது உடலைக் கண்டு சத்யராஜ் கண் கலங்கி நின்றார். தொடர்ந்து, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மறைந்த நடிகை செளகார் ஜானகி உடலை கண்டு கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்.!#Chennai | #Actress | #SowcarJanaki | #RIPSowcarJanaki | #PolimerNews pic.twitter.com/z83pafRaA4
— Polimer News (@polimernews) August 22, 2026