நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி!
Sep 19, 2025, 12:22 IST
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, ராஜ்கமல், நடிகை நளினி, கவிஞர் சிநேகன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.