×

அதிமுகவில் இருந்து விலகி 'தவெக'-வில் இணைந்தார் நடிகர் ரவி மரியா..!

 

சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், அமைச்சரும், கட்சியின் பொது செயலாளருமான என்.ஆனந்த் முன்னிலையில் தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான ரவி மரியா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.


யார் இந்த நடிகர் ரவி மரியா :

ஜீவா நடிப்பில் வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ரவி மரியா, நட்டி நடித்த மிளகா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பின்னர், நகைச்சுவை, குணசித்திர நடிகர் ஆனார். ரவிமரியா காமெடியனாக நடித்த படங்களில் தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்கள் பேசப்பட்டன. இவர் 7 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில், அவர் அதிமுகவிலிருந்து விலகி, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்காக அவர் பிரச்சாரம் செய்திருந்தது கவனிக்கத்தக்கது.


தவெகவில் இணைந்தது குறித்து நடிகர் ரவி மரியா அளித்த பேட்டியில்,முதல்வர் விஜய் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர்.. எல்லாத்தையும் விட யாரையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைக்கும் நல்ல மனிதர்.

லஞ்சமில்லாத ஒரு அரசை உருவாக்க முதல்வர் விஜய் முயற்சிக்கிறார். சட்டசபையை புதிய கோணத்தில் அணுகுகிறார். மக்களுக்கு அவரை பிடித்திருக்கிறது. எனக்கும் அவரை பிடித்திருக்கிறது. அதற்காக தான் நான் இந்தக் கட்சியில் இணைந்திருக்கிறேன். இந்தக் கட்சி பல்லாண்டு காலம் மக்கள் மனதில் நிலைத்திருக்க நான் பாடுபடுவேன்.” என்றார்.

நான் TVK-ல இதுதான் காரணம் பட்டியலிட்ட நடிகர்

நான் தவெகவில் இணைய இதுதான் காரணம் என நடிகரும் முன்னாள் அதிமுக நிர்வாகியுமான ரவி மரியா தெரிவித்துள்ளார்#ssnews #NewsUpdate #dailynews #CMVijay #TVK #RaviMaria pic.twitter.com/QSa6M6yBhs

— SS News Digital (@SSNEWSDigital) July 4, 2026