வைரலாகும் ட்வீட்..! வித்தியாசமாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
ஆங்கில புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது, குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது என உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். தமிழ்நாடு முழுவதிலும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் பொதுமக்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இதே போன்று ரசிகர்கள் தங்களது ஆதர்சன கதாநாயகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறனர். அப்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து சொல்ல காத்திருந்தனர்.
இந்நிலையில், தன் வீட்டின் முன் கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆண்டுதோறும், புத்தாண்டு மற்றும் அவரது பிறந்தநாள் தினத்தன்று ரஜினி வீட்டின் முன்பாக ரசிகர்கள் கூடுவது வழக்கம். அப்போது, தனது ரசிகர்களைப் பார்த்து நன்றி கூறிவிட்டுச் செல்வார்.
நடிகர் ரஜினி 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்... அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் நடித்த முத்து படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை குறிப்பிட்டு, இந்த புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.