×

அரசியலில் இருந்து விலகியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

 

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் கடந்த ஆண்டு நடந்தன.   

அந்த கட்சியில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார் காந்திய மக்கள் இயக்கம்  தமிழருவி மணியன்.  கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்த பின்னர்  கட்சியின் சின்னம், கொடி, மாநாடு என்று வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று தான் கட்சி தொடங்கவில்லை.  இனி எந்த காலத்திலும் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை. அரசியல் என்பதே என் வாழ்நாளில் இனி கிடையாது என்று அறிவித்தார் ரஜினி.

அரசியலில் இருந்து விலகிய காரணத்தை சென்னையில் நடைபெற்ற னியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. நான் அந்த சமயத்தில் வெளியே சென்றதால் உடல் பாதிக்கும் என்று மருத்துவர் கூறியதால் மட்டுமே நான் அரசியலில் இருந்து வெளியே வந்தேன். சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால்தான் அரசியலில் இருந்து விலகினேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறினார்கள்/ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியாது என தெரிந்தும், சிலர் கடவுள் இல்லையென கூறுகின்றனர்.” என்றார்.