×

"என் கஷ்டத்தில் துணையாக நின்றவர்" - ஏவிஎம் சரவணன் மறைவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..! 

 

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (வயது 86) வியாழக்கிழமை காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அவர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில்,  நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/1wv8zjS47Is?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1wv8zjS47Is/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">