☰
×

"தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவுகிறது"- நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு பேட்டி

 

இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்? என நடிகர் பிரகாஷ் ராஜ் வினவியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். SIR பணிகளால் எந்தக் கட்சி வென்றது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. வாக்கு என்பது நமது உரிமை, அதன் மீது எவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளது என்பதைத்தான் பேசப் போகிறேன். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. நீட், தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடிய தமிழ்நாடு S.I.R.-க்கு  எதிராக ஏன் போராடவில்லை? நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மட்டும் மீதமுள்ளார்.

2025ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 6 மாதத்தில் எஸ்.ஐ.ஆர். நடத்த வேண்டிய தேவை என்ன..? எஸ்ஐஆர் பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என நிர்ணயித்தது ஏன்..? என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பில்லா - ரங்கா. தமிழ்நாட்டில் 6 கோடி மக்களின் உரிமையை ஒரே மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன? யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியட்டும்.. இது வாக்குரிமை மீதான Attack இல்லை, ஜனநாயகத்தின் மீதான Attack.” என விமர்சித்தார்.