×

 மு.க.ஸ்டாலினின் தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புதான் அவரை முதலமைச்சராக்கியுள்ளது  - நடிகர் பிரபு

 

என் தந்தை சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று  நடிகர் பிரபு தெரிவித்துள்ளார் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜியின்  திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் மணிமண்டபத்தில் உள்ள நடிகர் சிவாஜியின் புகைப்படங்களையும் முதல்வர் ஸ்டாலின்  பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் நடிகரும், சிவாஜியின் இளைய மகனுமான  பிரபு, மு.க.ஸ்டாலினின் தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புதான் அவரை முதலமைச்சராக்கியுள்ளது; என் தந்தை சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது  என்று தெரிவித்துள்ளார்.  நடிகர் சிவாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு , சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.