பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா விருது - நடிகர் சங்கம் வலியுறுத்தல்
Jun 10, 2026, 21:34 IST
நடிகர் சங்கம் சார்பாக பாரதிராஜாவுக்கு நடிகர்கள் கார்த்தி, நாசர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், “தமிழ் சமூகம் சார்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு ஒன்றிய அரசின் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாரதிராஜா வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். அவரது உடல்தான் மறைந்திருக்கிறதே தவிர, அவருடைய ஆன்மவும் அறிவும் மறையவில்லை. பாரதிராஜா நேரம் கடந்து வந்திருந்தால் தமிழ் சினிமா வேறுமாதிரி இருந்து இருக்கும்.. எம்.ஜி.ஆர்., சிவாஜியை இழந்து தத்தளிக்கும் போது தமிழ் சினிமாவில் புதிய அணுகுமுறையை கொண்டு வந்தவர் தான் பாரதிராஜா” என்றார்.