×

“என்னுடைய நாடி நரம்பெல்லாம் தமிழ் உணர்வுகளை செலுத்தியவர் சீமான் தான்”- மாதவன் ஓபன் டாக்

 

பல மொழிகளை அறிந்து கொள்வது என் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

மொழிப்பிரச்னை குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் மாதவன், “சில விஷயங்களில் தமிழர்கள் வித்தியாசமானாவர்கள். அன்பு காட்டுவதில் தமிழர்கள் தனித்துவமானவர்கள். அண்ணனாகவோ அல்லது தம்பியாகவோ ஒரு நபரை உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள். கூச்சத்தை மீறி மிகவும் இயல்பாக பேசக் கூடிய ஆற்றல் தமிழர்களிடம் இருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாயை கூட தமிழர்கள் மரியாதையோடு நடத்துவார்கள். ஒரு தமிழனாக மாறி, அதன் கலாசாரத்தை நான் கற்றுக் கொண்டதற்கு இயக்குநர் சீமான் முக்கிய காரணம். இதற்காக அவருக்கு நான் நன்றி கூற வேண்டும்.

பல மொழிகளை அறிந்து கொள்வது என் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது. நான் தமிழ் பேசுவேன், இந்தி பேசுவேன், கோலாப்பூரில் படித்ததால் மராத்தியும் கற்றுக்கொண்டேன். எனவே, மொழி தொடர்பாக எனக்கு

எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை” என்றார்.