"மாரிமுத்து மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்" - சசிகலா இரங்கல்
Sep 8, 2023, 12:32 IST
மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும் என்று சசிகலாதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.