×

நடிகர் கவினுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்: மகனுக்கும் மகளுக்கும் வைத்த அழகான பெயர்கள் இதோ!

 

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார் கவின். இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் டாடா திரைப்படம்.

அண்மையில், நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்திருந்தார், அப்படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.இவர்கடந்த 2023ம் ஆண்டு தனது காதலியை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு, கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியில் ரெட்டை குழந்தை பிறந்திருந்தது. இதற்கு பல்வேறு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்திருந்தனர். தற்போது தனது ரெட்டை குழந்தைகளின் பெயரை கவின் அறிவித்துள்ளார்.

நடிகர் கவினுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு குழந்தைகள் பிறந்த நிலையில், தனது பெண் குழந்தைக்கு “தியோலினா கவின்” என்றும், மகனுக்கு “தியோன் லியோ கவின்” என்றும் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைகளில் பாத புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். மேலும் கவின் பகிர்ந்த எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறைவனுக்கு நன்றி 🙏🏼

எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும், தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.

Theolina Kavin
Theon Leo Kavin

:) ♥️ pic.twitter.com/5heRRiSKgz

— Kavin (@Kavin_m_0431) September 3, 2026