×

விபத்தில் சிக்கினார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்..!

 

பிரபல நடிகர் நடிகர் ஜோஜு ஜார்ஜ் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். மூணாறு அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது, ஜீப் கவிழ்ந்து விபத்தில், படுகாயமடைந்த ஜோஜு ஜார்ஜ்-க்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தீபக் பரம்போல் காயமடைந்துள்ளனர்.அவர்கள் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூணாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

''வரவு'' படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபுராஜ், வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன், அஷ்வின் குமார், அபிமன்யு திலகன், பிஜு பாப்பன், பாபி குரியன், அஸீஸ் நெடுமங்காட், ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், பாலாஜி ஷர்மா, சாலி பாலா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.