“கோவில்களில் நடந்த இதெல்லாம் மசூதி நடக்கவில்லை”- இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து நடிகர் ஜெய் கருத்து
May 20, 2026, 19:46 IST
நடிகர் ஜெய் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அதில் நடிகர் ஜெய் கூறியிருப்பது, “நான் சபரிமலைக்கு மாலை போட்டிருகிறேன், ஜீசஸ்க்கு மாலை போட்டு ஒருவருடம் விரதம் இருந்திருக்கிறேன். அதனால் எல்லா கடவுளையும் நான் மதித்து இருக்கிறேன். ஆனால் கோவிலில் தொடர்ந்து பல அவமானங்களை நான் சந்தித்தேன். இஸ்லாமாகி மசூதிக்கு நான் சென்றபோது அங்கு என்னை யாரும் செலபிரிட்டியாக பார்க்கவில்லை. மசூதி உள்ளே என்னிடம் பேச கூட இல்லை. கடவுளை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார்கள். என்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூட கேட்கவில்லை.சாமி கும்பிடும்போது பிடித்து தள்ளுவது, கிளம்புங்க என சொல்வது போல எதுவும் நடப்பதில்லை. அங்கே எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் pray பண்ணலாம்” என்றார்.