மகளிர் அணி நிர்வாகிகளுக்கு காமாட்சி விளக்கு பரிசளித்த நடிகர் தனுஷ்
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழக அரசியல் களம் இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி பாரம்பரிய கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் ,பெண்கள் வாக்குகள் அனைத்தும் தவெக பக்கம் சென்றதால், அதிமுகவும், திமுகவும் களையிழந்து உள்ளன. முதல்வர் விஜய்யின் எழுச்சியை சமாளிக்க, விஜய்க்கு இணையாக தனுஷ் களமிறங்குகிறார். தனுஷின் ரசிகர் மன்றமான நற்பணி மன்றம் பெயர் மாறி, நற்பணி இயக்கம் ஆனது. இது சாதாரண பெயர் மாற்றம் அல்ல, அரசியலுக்கான முதல் அடி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்நிலையில் செம்மஞ்சேரியில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் நிர்வாகிகளுக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசளித்தார். ஆனால் நடிகர் தனுஷ் அரசியல் பேசவில்லை. நடிகர் தனுஷ் என்ன பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் அரசியல் பேசவில்லை. நன்று படித்து, வேலைக்கு செல்லுமாறு மகளிருக்கு நடிகர் தனுஷ் அறிவுரை கூறினார்.