நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மீது பைக் மோதியதால் படுகாயம்..?
Jan 3, 2026, 21:45 IST
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ரூபாலி பரூவா அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தனர். சாலையைக் கடக்கும்போது பைக் மோதியது. சிறிய காயங்களுடன் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பரூவாவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆஷிஷ் வித்யார்த்தி ஒரு வீடியோ மூலம் விபத்து குறித்து தகவல் அளித்துள்ளார். "இது ஒரு சிறிய விபத்து. கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.