ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் அஜித்!
Sep 11, 2026, 17:31 IST
லண்டனில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்தை காண வந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் பணிவான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
லண்டனில் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு பணிவாக அறிவுரை வழங்கிய அஜித் குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில், “இது மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதி, இது தடைசெய்யப்பட்ட பகுதி. அதனால் தயவுசெய்து கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். ஓரமாக நில்லுங்கள். உங்களுக்கு எந்த விதத்திலும் காயம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.இங்கு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி” என்றார்.