☰
×

சென்னை சாலைகளில் மனைவி ஷாலினியுடன் காரில் 'லாங் டிரைவ்' சென்ற நடிகர் அஜித் குமார்: வைரலாகும் காணொளி!

 

நடிகர் அஜித் குமாரும் அவரது மனைவி ஷாலினியும் சென்னையின் சாலைகளில் காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட இனிமையான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள அஜித் குமார், தனது மனைவி ஷாலினியுடன் காரில் நீண்ட பயணம் (Long Drive) மேற்கொண்டார்.பரபரப்பான சென்னைச் சாலைகளில் அஜித் குமார் தானே காரை ஓட்டிச் செல்ல, அருகில் அமர்ந்திருந்த ஷாலினி அந்த இயல்பான தருணத்தைத் தனது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.

காரில் பயணம் செய்யும்போது 'ஸ்மியாய்' (Smiyai) என்ற பாடல் ஒலிப்பதும், அதனை இருவரும் ரசித்தபடி பயணிப்பதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது

ஷாலினி இந்தக் காணொளியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Music, love & a long drive… ❤️" (இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்) என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.