“மானம் போகுது” - ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட அஜித்
Feb 10, 2026, 17:07 IST
“ப்ளீஸ்... ஒழுங்கா நடந்துக்கங்க... இது தியேட்டர் கிடையாதுங்க” என ரசிகர்களிடம் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கடிந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அபுதாபியில் உள்ள ரேஸ் சர்க்யூட்டில் ரசிகர்கள் சிலர் குடித்துவிட்டு வந்து அங்கே கூச்சலிட்டு கொண்டும், மற்ற கார்களில் சாய்ந்தபடி அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அஜித், தயவு செய்து ஒழுங்கா நடந்துக்கோங்க, இது ஒன்னும் தியேட்டர் இல்ல, நம்ம மானம் போகுது. ரசிகர்களிடம்,
முதலில் உங்கள் குடும்பங்களை நல்லா கவனித்து கொள்ளுங்கள், உங்கள் வளர்ச்சிக்கு, கல்வியில் கவனம் செலுத்தி நன்றாகப் படிங்கள்.
நடிகர்களின் "சுயநலத்திற்கான அரசியல் பின்னாடி போகாதீர்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார்.