×

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற நடவடிக்கை

 

தமிழ்நாட்டில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சார்க் விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 
பாகிஸ்தானியர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் என்ற தகவல்களை காவல்துறை சேகரிக்கிறது. பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.