×

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பற்றி முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுமான பொருட்கள் விலை 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் முதல் ஜல்லி வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால் கட்டுமான பொறியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பற்றி முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுமான பொருட்கள் விலை 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் முதல் ஜல்லி வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால் கட்டுமான பொறியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அகழாய்வு நடைபெறும் இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.