×

டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு! இனி ‘இந்த’ நேரத்திற்கு மேல் திறந்திருந்தால் அவ்ளோதான்..!

 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டம்.

மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்கள் அவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள பணியமர்த்த வேண்டும்.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.