×

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நடிகர்கள் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அந்த படத்தின் டீசர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தியேட்டர்களில் டிக்கெட் பெறுவதற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு, சிலர் மாஸ்டர் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. அரியலூரில்
 

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நடிகர்கள் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அந்த படத்தின் டீசர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தியேட்டர்களில் டிக்கெட் பெறுவதற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு, சிலர் மாஸ்டர் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. அரியலூரில் ரூ.120க்கு விற்க வேண்டிய டிக்கெட் ரூ.700க்கு விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். பல இடங்களில் கட்டணம் உயர்த்தி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கேளிக்கை வரி குறித்து பேசிய அவர், திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

மேலும் கமல்ஹாசனின் விமர்சனத்திற்கு பதில் அளித்த கடம்பூர் ராஜூ, கமல்ஹாசனை மக்கள் யாரும் கட்சி தொடங்க அழைத்தார்களா?. கமல்ஹாசனை விட கட்சி தொடங்கிய ஜாம்பவான்களை காணவில்லை என்று விமர்சித்தார்.