×

கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. தனியார் பள்ளி கட்டணம் தொடர்பாக,
 

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.

தனியார் பள்ளி கட்டணம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில், 40 சதவீத கட்டணத்தை உடனேவும், 35 சதவீத கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. முழு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளின் விவரங்ககளை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.