அதிரடி அறிவிப்பு! ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த முடிவால் ஸ்தம்பிக்கும் சென்னை... ஆகஸ்ட் 19-ல் என்ன நடக்கப்போகிறது?
Updated: Sep 11, 2026, 12:14 IST
தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு, புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய, சென்னையில் கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது.
தொழிற்சங்க நிர்வாகிகள், பயணியர் தரப்பில் பேச்சு நடத்தி, தமிழக அரசு ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பாக, இறுதி அறிக்கையை தயாரித்தது.
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்காக, புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பது ஏற்புடையதல்ல. எனவே, திருத்தப் பட்ட புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அறிவிக்க வேண்டும். 'பைக் டாக்ஸி'யை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 19ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.
இதில், ஒன்பது தொழிற்சங்கங்களை சேர்ந்த, ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.