×

மெரினாவில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை! மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

 

ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி  சென்னை மெரினா கடற்கரைக்கு போராட்டத்திற்கு வரும்படி பொய்யான தகவலை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் எந்தவிதமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளும் மேற்கொள்ள கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்ட தடை உத்தரவு வரை அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு உத்தரவின்படி. வருகின்ற வரும் 30 வரை பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவும் (144 Crpc) அமலில் இருந்து வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41ன் படி காவல் துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று  உயர் கல்வித்துறை அமைச்சர்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கல்லூரி மாணவ  பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தேர்வுகள் வருகின்ற ஜனவரி மாதம் 20ந்தேதி முதல் நேரடி தேர்வு நடத்துவது என்று முடிவு செய்து அதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் சிலர் சமூக வலைதளங்களில், இணையதள தேர்வு நடத்த கோரி, வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் மெரினா கடற்கரைக்கு போராட்டம் நடத்த மாணவர்களை வரும்படி அழைப்பு விடுத்து முகநூல், ட்விட்டர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்களில் பொய்யான செய்திகள் மற்றும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.

இது போன்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதால், மாணவர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் எனவும், இது போன்று பொய்யான வதந்திகளை மேற்படி சமூக வலை தளங்கள் மூலம் பரப்புவோர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் உட்பட இதர சட்டபிரிவுகளின் கடுமையான படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.