×

சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்ட சாதனையாளர்கள்! டாக்டர் வி. மோகனுக்கு 'அப்துல் கலாம்' விருது!

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சாதி, மதம் கடந்து அனைவரும் இணைய வேண்டும் என்றார். லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், கொள்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம் என்றும், நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்தார்.

 

முதல்வரின் பேச்சைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன.

தகைசால் தமிழர் விருது எம். கிருஷ்ணசாமிக்கும், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருது டாக்டர் வி. மோகனுக்கும், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நௌஷீன் பானு சந்திற்கும் வழங்கப்பட்டன.

முதலமைச்சரின் நல்லாளுமை விருது, லட்சுமி பவ்யா தண்ணீர், எஸ். சதீஷ் பிரபு, மருத்துவர் எம். கீதாஞ்சலி ஆகியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகளில், சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது ச. தினேஷ் குமார், சிறந்த மருத்துவர் ப. திருநாவுக்கரசு, சிறந்த நிறுவனம் சிருஷ்டி பவுண்டேஷன், சிறந்த சமூகப் பணியாளர் பா மணிமாறன், அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் எம்.சி.எம் கார்மெண்ட்ஸ்ட் பிரைவேட் லிமிடெட், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.

 

APJ Abdul Kalam Award, announced for diabetes specialist Dr. Mohan, was received by his family members from Chief Minister Joseph Vijay. pic.twitter.com/3MDh2AHgos

— Vignesh Theni (@Vignesh_twitz) August 15, 2026


 

சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைகளுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்கள் பிரிவில், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் அட்சயம் டிரஸ்ட், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் இ. ராதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான முதலமைச்சர் விருது பிரிவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் பரிசு 6வது மண்டலத்துக்கும், 2ஆம் பரிசு 2வது மண்டலத்துக்கும், சிறந்த மாநகராட்சியில் முதல் பரிசு கோவைக்கும், 2ஆம் பரிசு தஞ்சைக்கும், சிறந்த நகராட்சியில் முதல் பரிசு தேனி போடிநாயக்கனூருக்கும், 2ஆம் பரிசு திருவண்ணாமலை ஆரணிக்கும், 3ஆம் பரிசு விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிக்கும், சிறந்த பேரூராட்சியில் முதல் பரிசு தஞ்சை திருவிடைமருதூருக்கும், 2ஆம் பரிசு கன்னியாகுமரி கருங்கல்லுக்கும், 3ஆம் பரிசு கோவை செட்டிப்பாளையத்துக்கும் வழங்கப்பட்டது.