×

‘தளர்வுகளுக்கு பின் அதிகரிக்கும் விபத்துகள்’ பாதிப்புகுள்ளாகும் இளைஞர்கள்!

ஊரடங்கிற்கு பின்னர் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கில் கடந்த ஜூலை மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதே போல, முடக்கப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து சேவைக்கும் அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் முழுமையாக அனைத்து சேவைகளும் இயங்காததால், மக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

ஊரடங்கிற்கு பின்னர் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கில் கடந்த ஜூலை மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதே போல, முடக்கப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து சேவைக்கும் அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் முழுமையாக அனைத்து சேவைகளும் இயங்காததால், மக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, சென்னையில் 179 விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக விபத்தில் அதிகளவில் இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நாளொன்று 2 முதல் 4 அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும் தெரிகிறது.

சிகிச்சை எண்ணிக்கை ஊரடங்கு காலத்தில் 30ஆக இருந்த நிலையில் தற்போது 80 ஆக அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா ஊரடங்கால் குறைந்திருந்த விபத்துகளின் எண்ணிக்கை மீண்டும் தலைதூக்குவதாகவும் இளைஞர்களிடையே போதிய விழிப்புணர்வு தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.