அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Jul 8, 2024, 15:07 IST
கம்பத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு பிரிவில் ஒரு பகுதி விபத்துக்குள்ளானது.
தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கட்டிட தொழிலாளி ஒருவர் பலியாகி உள்ளார்.
அத்துடன் படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் . தற்போது அவருக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.