“தாய் வீட்டில் ஒரு தொகுதி.. புகுந்த வீட்டில் ஒரு தொகுதி..” - ஏ.சி.சண்முகம்
தாய் வீட்டுச் சீதனமாக அதிமுக ஒரு தொகுதியும், புகுந்த வீடான பாஜக ஒரு தொகுதியும் எங்களுக்கு ஒதுக்கியுள்ளன என புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம், “ NDA கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக என்னுடைய தாய் வீடு, தாய் வீட்டு சீதனமாக எனக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. புகுந்த வீடான பாஜக ஒரு தொகுதியும் எங்களுக்கு ஒதுக்கியுள்ளன” என்றார்.
புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம் ட்தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் புதிய நீதிக்கட்சி சார்பில் கணேசன் என்பவர் வேட்பாளராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.