×

தீப்பற்றி எரிந்த ஏசி: மூச்சுத்திணறி 2 பேர் பலி

 

ஏசியில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் ஏசியில்  மின் கசிவு காரணமாக தீப்பற்றியதில் தாய் மகள் உயிரிழந்தனர். ஏசி தீப்பிடித்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் ஆதிலா,  மகள் நஸ்ரின் மூச்சு திணறி உயிரிழந்தனர். 

ஏசியில் தீப்பிடித்து வயர்கள் எரிந்ததால் ஏற்பட்ட கரும்புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.