பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்கும்: தங்கம் தென்னரசு..!!
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த திமுக MLA தங்கம் தென்னரசு, அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்ய கூடாது எனவும், இத்திட்டத்தை ரத்து செய்வது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே ஒசூர் விமான நிலையம் மறுக்கப்பட்டுள்ள சூழலில் இத்தகைய முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அவர் மேலும் பேசியதாவது, பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியிண் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கபப்டும் என கூறி இருந்தனர். முதலமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்தால் பரந்தூர் விமான நிலைய குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம். ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம் என்றார் தங்கம் தென்னரசு.