“கத்துக்குட்டி விஜய்... அரசியலில் ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது”- ஆர்த்தி கணேஷ்
அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி எனவும் அரசியல் என்பது சினிமா கிடையாது அங்கு ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது என்றும் நடிகை ஆர்த்தி கணேஷ்க விஜயை விமர்சித்துள்ளார்.
திருவள்ளுர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வி.ஜி.ராஜேந்திரன் இரண்டு முறை தொடர்ந்து அதிமுகவை தோற்கடித்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தோழமை கட்சிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.இந்த நிலையில் திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனி பகுதியில் சினிமா நடிகர்கள் ஆர்த்தி கணேஷ்கர், ராஜ்காந்த் திருவள்ளூர் திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரனுக்கு ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வி.ஜி.ராஜேந்திரனுக்கு வாக்கு சேகரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஆர்த்தி, “விஜய் சினிமாவில் 50 வருடம் இருந்தவர். அவருக்கு டான்ஸ் தெரியும், சண்டை தெரியும், நடிக்க தெரியும். அந்த கேரக்டராகவே வாழ தெரியுமே தவிர, அவர் வெளியே வந்து சாதாரண எளிய மக்களிடம் வாய்ந்தோ, பழகியோ விஜய்க்கு பழக்கம் இல்லை. தமிழ்நாட்டை சுற்றி வருவதற்கே அவருக்கு டைம் தேவைப்படுது, வெயில் அவருக்கு அலர்ஜி ஆகிறது.. டி ஹைட்ரேட் ஆயிட்ராரு. அரசியல் என்பது சினிமா கிடையாது, அங்கு ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது. சைக்கிள் ஓட்ட தெரியவில்லை என்றால் அடுத்த நாள் நன்றாக சைக்கிள் ஓட்டி காட்டுகிறார். அந்த மாதிரி அரசியல் கிடையாது. 24 மணி நேரமும் மக்களோடு இருந்து மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், கரூரில் நடந்த சம்பவத்தன்று தனுக்காக 41 பேர் இறந்து விட்டார்கள் என்று தெரிந்தும் அவர் பயந்து அங்கிருந்து சென்று விட்டார்.ஏனென்றால் அவருக்கு அனுபவம் இல்லை. அவர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது தான் அரசியலில் அவர் சைக்கிள் ஓட்டவே ஆரம்பித்திருக்கிறார். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு, பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். தனக்காக வரும் தன்னுடைய ரசிகர்களை நல்வழியில் நடத்த வேண்டும், அதை விட்டுவிட்டு விசில் அடித்து ஜாலியாக அவர்களிடம் ஃபன் பண்ணி கூட்டத்திற்கு ஆள் சேர்க்கிற அக்கறையை விட்டுவிட்டு, அவர்களுடைய எதிர்காலத்தில் அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும். அவர் அரசியலில் கத்துக்குட்டி தான், அதனால் அவர் அரசியலில் சாதிக்க இன்னும் டைம்மாகும். அவருக்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் செட்டப்பா என்று தெரியவில்லை. அவர் முகத்திற்காக ஓட்டு வரும் என்று அவர் நினைக்கிறார். மக்களோடு அவர் பேச வேண்டும் மக்களுடைய கஷ்டங்களை புரிய வேண்டும், அதற்கான திட்டங்களை அமைக்க வேண்டும். இதுபோன்ற நிறைய விஷயங்கள் இருக்கு, அவர் போகப்போக கத்துக்குவாரு,அவர் கத்துக்கணும்னா திமுக அதை அவருக்கு கற்றுக் கொடுக்கும். அதனால் தான் விஜய் என்ன பேசினாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பி எதுவுமே பேசுவதில்லை. ஏனென்றால் குழந்தைகிட்ட என்ன சொல்லித் தரத்து குழந்தையை தானாக தவிர்ந்து கத்துக்கணும்” என்றார்.