×

தீராத பித்ரு தோஷம் நீங்கும் ஆடி அமாவாசை: 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் அபூர்வ சேர்க்கை!

 

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை திதியில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். இருப்பினும் எல்லோராலும் அனைத்து அமாவாசைகளில் முன்னோர்களுக்கான வழிபாடு செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் தவறாமல் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று முக்கிய அமாவாசைகளாவது, வழிபாடு செய்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

பலருக்கும் திருமணத்தடை, காரியங்களில் தடை, தொழிலில் முன்னேற்றம் இன்மை, வேலையில் பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்காத சூழல், குடும்பத்தில் அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக அமைவது பித்ரு தோஷமே என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒருவர் இந்த உலகிற்கு வர காரணமாக அமைந்தவர்களும், நமக்கான உடல் மற்றும் உயிரை கொடுத்த நம்முடைய பெற்றோர், அவர்களுக்கு முந்தியவர்களான முன்னோர்கள், ஆகியோருக்கு அவர்களின் மறைந்த பிறகு ஒரு ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. அப்படி செய்யாமல் விடும்போது, அவர்களின் வருத்தத்திற்கு ஆளாகும் போது, அவர்களுடைய மனக்குரியே நம்மை பித்ரு தோஷமாக பிடிக்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு அல்லது கேதுடன் எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும், அது பித்ரு தோஷத்தை குறிக்கும். அப்படிப்பட்ட ஜாதகத்தை கொண்டவர்கள் பித்ரு வழிபாட்டை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது அவசியம்.பித்ரு தோஷம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், தந்தையே இழந்த அனைவரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது அவசியம்.

பொதுவாக சூரியன் மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் ஏற்படக்கூடிய அமாவாசையை தாண்டி இந்த முறை, கடக ராசியில் உச்சம் பெற்ற குருவுடன் இணைந்திருக்கின்றார்கள். இதன் காரணமாக குருவின் அருள் ஆசியும் கிடைக்கும். அதனால் இந்த ஆடி அமாவாசை வழிபாட்டை செய்வதன் மூலம் பலன்கள் நமக்கு ஏராளமாக கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த அற்புத நாளில் செய்யக்கூடிய எந்த ஒரு தான தர்மம், நற்செயல்கள், வழிபாடு ஆகியவற்றிற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பித்துருக்களின் ஆசிர்வாதத்தால் தீராத பிரச்சனைகளுக்கு கூட தீர்வு கிடைக்கும்.

நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு, இந்த குறைபாடு படிப்படியாக நீங்கும். நிதிநிலை முன்னேற்றமும் பொன், பொருள் சேர கூடியதாக இருக்கும். திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் விலகும்.

மேலும் குலதெய்வம் வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்ற நாள். இது போன்ற அற்புதமான அமாவாசையை 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் திரும்ப வரும். அதனால் இந்த அற்புதங்களை முன்னோர்களுக்கான வழிபாடு செய்து அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுவோம். இன்று ஆகஸ்ட் 12, ஆடி அமாவாசை அன்று அனைவரும் தவறவிடாமல் வழிபட்டுப் பயனடையுங்கள்.