“என் தாய் இழப்பிற்குப் பிறகு இதுதான் மிகப்பெரிய இழப்பு”- ஆதவ் அர்ஜூனா
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிரொலியாக ஆதவ் அர்ஜுனா இன்று காலை தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். பெரும் சர்ச்சையை கிளப்பிய அந்த டீவிட்டையடுத்து உடனடியாக அதை நீக்கி விட்டார்.
இது தொடர்பாக நந்தனத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, “கரூர் துயரச் சம்பவம் மிகுந்த மன வேதனையுடன் அளிக்கிறது. என் அம்மாவின் இழப்புக்கு பிறகு, என் வாழ்க்கையிலேயே இது மிகப்பெரிய இழப்பு. என்னுடைய 41 குடும்பங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்து இருக்கிறது எனக்கு வலியைக் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்போதைக்கு நான் எதுவும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை. இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். எனது துயரத்தையும் மீறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விரைவில் சந்திப்பேன், கூடிய விரைவில் அவர்களைச் சந்திப்போம். அவர்களோடு நமது மிகப்பெரிய பயணம் தொடரும்” என்றார்.