×

"மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும்"- ஆதவ் அர்ஜூனா

 

மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும் என தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில். 

தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.