×

“பகுதிநேர ஆசிரியர்களுக்கு நம்பிக்கை துரோகம்! மக்கள் விரைவில் பதில் கொடுப்பார்கள்”- ஆதவ் அர்ஜூனா

 

போராட்டத்தின் போது விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் பணி உறுதிப்பாடு மற்றும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள். இந்நிலையில், நேற்று போராட்டத்தின் போது விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.'பணி நிரந்தரம் வேண்டும்' என்ற நியாயமான உரிமை கேட்டுப் போராடுகிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள். ஆனால், சொற்பமான ரூ.2500-ஐ கூடுதல் ஊதியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் சலுகை வழங்குவதாக சொல்கிறது இந்த பண்ணையார் மனநிலை திமுக அரசு. சமூக முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் ஆசிரியர்களையே அதிகார மனநிலையின் உச்சத்தில் இப்படிப் போராட வைத்துக்கொண்டிருக்கிறது திமுக அரசு.

null

null

null


கடந்த தேர்தல்களில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது இந்த அரசு. மேலும், அவற்றைக் கவனப்படுத்திப் போராடுபவர்களை மரணிக்கும் மனநிலைக்குத் தள்ளும் அளவுக்கு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விளைவாக, இன்று ஒரு பகுதிநேர ஆசிரியரை நாம் இழந்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இறப்புக்குக் காரணமான திமுக அரசை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களாட்சி ஜனநாயகத்தில் விரைவில் அதற்கான பதிலைக் கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.