“நீதியை நிலைநாட்ட பாடுபடுவோம்”- ஆதவ் அர்ஜுனா
Oct 13, 2025, 17:50 IST
கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.