×

“10 வருஷ கூட்டணி பத்தே நாட்களில் எங்கள் தலைவரை நோக்கி வந்தார்கள்”- ஆதவ் அர்ஜூனா

 

திமுக உருவாக்கிய 10 வருஷ கூட்டணி பத்தே நாட்களில் எங்கள் தலைவரை நோக்கி வந்தார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடிப்பீர்களா..? என கேள்வி எழுப்பினர். 1967-ல் அண்ணாவுக்கு எழுப்பப்பட்ட அதே கேள்வி தவெகவுக்கும் எழுப்பப்பட்டது. தி.மு.க. உருவானபோது கட்சியில் இருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே... அண்ணா கட்சி ஆரம்பிக்கும்போது கலைஞர் கருணாநிதிக்கு 26 வயதுதான். 1967, 1977 புரட்சிகளை தொடர்ந்து 2026-ல் தேர்தல் வெற்றி. தவெகவில் வென்றவர்கள் யாரும் பண்ணையார் பிள்ளைகள் அல்ல. 8 பட்டியலின சகோதரர்களை அமைச்சராக்கி பெரியார் கண்ட கனவை நிறைவேற்றி உள்ளோம். ஏழையும், சாமான்யனும் எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற கனவு வரலாறாகி உள்ளது. 

காய்கறி வாங்குவதை போல வாக்குகளை வாங்கும் கலாச்சாரத்தை ஒழித்தவர் விஜய். இங்கு உள்ளவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் இல்லை.. மன்னராட்சியின் மகன்கள் இல்லை.. நாங்கள் சாதி, மத பலம் எதுவும் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபர்கள். அம்பேத்கர் கனவு இந்த அவையில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இந்த அவையில் அமர்ந்துள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் உயர்தர பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும். தேசிய விளையாட்டில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் விமான கட்டணத்தை அரசு ஏற்கும். மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கடல்வழி படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படும்” என்றார்.